இந்த சலுகை அமலுக்கு வந்தா காசு தராம பறக்கலாம்…
விமானத்தில் பறப்பது இப்போதெல்லாம் பேருந்தில் செல்வது போல ஆகிவிட்டது. பல நாட்டினரும் தங்கள் விமான பயணிகளை கவர புதுப்புது உத்திகளை செய்து வருகின்றன. இந்த சூழலில் மத்திய விமான போக்குவரத்து அமைப்பான DGCA ஒரு புதிய திட்டத்தை வகுக்க அறிவுரைகளை துறைசார்ந்த நிபுணர்களிடம் கேட்டுள்ளது. அதாவது ஒருநபர் தனது பயணத்தை பிஸ்னஸ் கிளாஸ்,எக்னாமி கிளாஸ் என வகை படுத்தி ஆர்டர் செய்வது வழக்கம் . இவ்வாறு ஆர்டர் செய்யும் போது காட்டிய சீட்டு இறுதி நாளில் சீரான இடமில்லாமல் போவது தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் புதிய வழிகாட்டு கொள்கையை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வரையறுத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எளிமையா சொல்ல வேண்டுமானால், உதாரணத்துக்கு ஒரு நபர் தனது விமான டிக்கெட்டை வணிக பிரிவில் புக் செய்து கடைசி நேரத்தில் அவருக்கு அந்த சீட் கிடைக்காமல் போனால் அடுத்த முறை அவருக்கு விமான நிறுவனங்கள் இலவச பயணத்திட்டத்திற்கு சலுகை அளிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட உள்ளது. இது மட்டுமின்றி பயணியே தனது மனமிறங்கி, பயணத்தை ரத்து செய்து அடுத்த நபருக்கு வாய்ப்பளித்தால் முழு 100% பணத்தையும் திரும்ப அளிக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பு எதிர்பார்த்துள்ளது.