ரிஸ்க்கை அலட்சியப்படுத்தினால் விளைவுகள் மோசமாகும்..
தொழில் நிறுவனங்களுக்கும் ரிஸ்குக்கும் அதிக தொடர்பு எப்போதும் உண்டு. அதிலும் நிதி நிறுவனங்களுக்கு இதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கும். புதுசு புதுசாக கிளம்பும் ரிஸ்குகள் பிரச்னைகளை இன்னும் தீவிரப்படுத்தும். நிதித்துறையில் போதிய அனுபவம் இல்லாமல் சந்தைக்கு வரும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி போதிய ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. தொழில்நுட்ப யுகத்தில் பல்வேறு வங்கி நிறுவனங்களுக்கு ரிஸ்குகளை அகற்றுவதில் தொழில்நுட்பத்தின் பங்கு பெரிதாக இருக்கிறது. எனினும் டிஜிட்டல் ரீதியிலும் சில ரிஸ்குகள் இருக்கின்றன. குறிப்பாக வாடிக்கையாளர்கள் தரவுகள் திருட்டு,சைபர் தாக்குதல்களும் பெரிய சிக்கலாகும். அதிகரிக்கும் ரிஸ்குகளால் முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்களை இழக்கும் அபாயமும் நிதி நிறுவனங்களுக்கு உள்ளன. எப்போதும் ஒரு நிறுவனத்தில் கண்காணிப்பு என்பது மிகமிக அவசியமாகும். அதிலும் குறிப்பாக தற்போதைய சூழலில் அதிகரித்தும் வரும் தொழில்நுட்பங்கள் பிளாக் செயின்,செயற்கை நுண்ணறிவு நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி கண்காணிப்பை செய்யலாம் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும்,மனித முடிவுகள் மட்டுமே இறுதியாக இருக்கிறது. நிதி நிறுவனங்களில் உள்ள ரிஸ்க்குகளை சரியான நேரத்தில் கண்டறிவது பெரிய ஆபத்துகளை தடுக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.