ஏர் இந்தியா தலைவர் பதவி.. No சொன்ன இல்கர் அய்சி..!!
ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவி தனக்கு வேண்டாம் என இல்கர் அய்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி.யாக அய்சியை நியமிப்பதாக டாடா சன்ஸ் பிப்ரவரி 14-ம் தேதி அறிவித்தது.
இல்கர் அய்சி அறிவிப்பு:
இந்த நிலையில், எனது குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, பதவியை ஏற்றுக் கொள்வது சாத்தியமான அல்லது கெளரவமான முடிவாக இருக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்று அய்சி தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவை வழிநடத்தும் பெருமையையும் வாய்ப்பையும் தனக்கு வழங்கியதற்காக டாடா குழுமத்துக்கும், அதன் தலைவர் என்.சந்திர சேகரனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இல்கர் அய்சிக்கு எதிர்ப்பு:
தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஏர் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) மற்றும் நிர்வாக இயக்குநர் (MD) அய்சியின் நியமனத்துக்கு அரசாங்கம் அனுமதி வழங்கக் கூடாது என்று RSS அமைப்பின் துணைஅமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்சின் இணை-கன்வீனர் அஷ்வனி மகாஜன் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தானின் நட்பு நாடான துருக்கியின் அதிபர் ரிசெப் தையிப் எர்டோகனுக்கு நெருக்கமானவராக அய்சி கருதப்படுகிறார்.