சட்ட விரோத முதலீடும், ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையும்..
சட்ட விரோத வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் இந்தியாவில் சூதாட்டம் போன்ற திறமையை கையாண்டு வருவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளார். இந்தியாவில் அதிகாரமான 75 நிறுவனங்களைத் தவர்த்து மற்றவை முதலீடு செய்வது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பைபங்குச்சந்தை அதே போல் மெட்ரோபோலிட்டன் பங்குச்சந்தைகள் மட்டுமின்றி இதற பங்குச்சந்தைகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் என்றும் ராய்ட்டர்ஸ், புளூம்பர்க் உள்ளிட்ட நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட தலங்கள் மற்றும் தரகு நிறுவனங்களாக கூறப்பட்டுள்ளன. டாலர் ரூபாய், யூரோ ரூபாய், பிரிட்டன் பவுன்ட் ரூபாய் மற்றும் ஜெப்பானிய யென் ஆகிய நான்கு வகைகில் மட்டுமே வர்த்தகம் நடைபெறுவதாகவும், இவை நான்கு தவிர்த்து வேறு செய்தாலும் அது சட்டவிரோத வணிகம் என்றும் வெளிநாட்டு நிதி பயன்பாடு தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. OctaFX, Alpari, AnyFX, Ava Trade, Binomo, Exness, Expert , Option, FBS, FinFxPro, Forex.com உள்ளிட்ட நிறுவனங்கள் போலியானவை என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதிக வருவாய் உங்களுக்கு திரும்பக் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தும் இந்த நிறுவனங்கள் சூதாட்டத்தில் பயன்படுத்தும் அதே உத்தியை மக்களிடம் பயன்படுத்தி வருவதாக ரிசர் வங்கி எச்சரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக போலியான நிறுவனங்களை தோலுரித்து காட்டி வரும் ரிசர்வ் வங்கி , குறிப்பிட்ட நிறுவனங்களை மூடுவதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. ஆக்டா எஃப்எக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை கடும் நடவடிக்கையையும் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.