நான் நம்பர் 1 டூபாகூரா என்ற காமெடி பாணியில் பிதற்றிய மஸ்க்!!!
பணத்தை கொடுத்து பொருளை வாங்கிவிட்டு அதை என்ன செய்வது என தடுமாறும் பலரின் நிலைதான் தற்போது பெரும் பணக்காரர்களில் ஒருவரான மஸ்குக்கும் நிலவுகிறது. நாள்தோறும் ஏதாவது ஒரு பாணியில் தன்னைப்பற்றி தாமே டிவிட்டரில் தம்பட்டம் அடிக்கும் மஸ்க், அண்மையில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் டிவிட்டரின் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்டிருந்தார். இதற்கு 57.5% மக்கள் மஸ்க் பதவிவிலக வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். இந்த நிலையில் வாக்கெடுப்பில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தனக்கு மாற்றாக ஒருவர் கிடைத்ததும், பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார். டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கிய பிறகு,அவரின் பிற நிறுவனங்களான டெஸ்லா, ஸ்டார் லிங்க் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. 7,500 பணியாளர்களை நீக்கிவிட்ட பிறகு என்ன செய்வது என தெரியாமல் தவிக்கும் மஸ்க்,முடிவெடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். மஸ்கின் இந்த முடிவால் முதலீட்டாளர்கள் மட்டுமின்றி,விளம்பரதாரர்களும் விலகிச்சென்றுவிடுகின்றனர். இதனால் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய டிவிட்டரை உருட்ட முடியாமல் மஸ்க் உருட்டி வருகிறார்.