இந்திய ஏற்றுமதிக்கு பாதிப்பு?
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் இந்த ஓராண்டில் 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இருந்து கோதுமை, அரிசி, சர்க்கரை ஆகியவை ஏற்றுமதி செய்ய தடை உள்ளது. இதன் காரணமாகவும் செங்கடலில் தாக்குதல் நடந்ததாலும்,பாஸ்மதி அரிசி ஏற்றுமதிகள் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. உள்நாட்டில் விலைவாசியை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடைகளை இந்திய அரசு செய்திருந்தது. மேலும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு மாற்று கடல்பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஏமனின் ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் பாஸ்மதி அரசியின் விலை 15 முதல் 20 விழுக்காடு வரை உயரக்கூடும் என்று விஷயம் அறிந்த சிலர் தெரிவிக்கின்றனர். இந்தாண்டு ஏற்றுமதி பற்றாக்குறை அதிகரிக்கும் என்றும் ஆனால் சில பொருட்களால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி அதிகரித்து இருப்பதாகவும் அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. இறைச்சி, பால் பொருட்கள், பருப்பு உள்ளிட்ட பொருட்களும், பழங்கள், காய்கனிகள் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்திருப்பதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.