அமலுக்கு வந்த முக்கிய நிகழ்வுகள்..
மாதத்தின் முதல் நாளில் இந்த மாதம் என்னவெல்லம் சவால்கள் இருக்கின்றன என்பதை அறந்துகொள்ளுங்கள்,
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு ஆளான பேடிஎம் பேமண்ட் வங்கியில் ஜூலை 20 ஆம் தேதிக்கு பிறகு எந்த பரிவர்த்தனையும் மேற்கொள்ள இயலாது. அதற்குள் பேடிஎம் பேமண்ட் வங்கியில் உள்ள தொகையை எடுத்துவிடுவது சிறந்தது. இது தொடர்பாக பயனாளிகளுக்கு அறவிப்பும் வெளியிடப்பட இருக்கிறது. இதற்காக 30 நாட்கள் நோட்டீஸும் அளிக்கப்பட இருக்கிறது. இதேபோல் பாரத ஸ்டேட் வங்கியின் கிரிடிட் கார்ட்களில் அரசு சார்ந்த சில சலுகைகளுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை வந்திருக்கிறது. ஐசிஐசிஐ வங்கியில் சில சேவைகளுக்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணங்கள் இன்று முதல் ரத்தாக உள்ளன. அதேநேரம், கிரிடிட் கார்டுகள் மாற்றுவதற்கு 100 ரூபாய்க்கு பதிலாக இனி 200 ரூபாய் வசூலிக்கப்படும்வரும் 31 ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யப்பட வேண்டும், 31 ஆம் தேதி விட்டால் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி தான் கணக்கு தாக்கல் செய்ய இயலும். ஆக்சிஸ் வங்கி நோட்டிஃபை செய்யப்பட்ட கிரிடிட் கார்டுகள் அனைத்தின் தரவுகளும் வரும் 15 ஆம் தேதிக்குள் மாற்ற இறுதிகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன