இந்தியாவில் இனி நீங்க பாத்துக்கங்க பாஸ்…
பிரிட்டனை பூர்வீகமாக கொண்டு இயங்கி வரும் பைக் நிறுவனம் டிரியம்ப். இந்த நிறுவனம்,அண்மையில் பஜாஜ் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டியிருந்தது. அதாவது, டிரியம்ப் பைக்குகளின் இந்திய விற்பனை மற்றும் மார்கெட்டிங் தரவுகளை பஜாஜிடம் டிரியம்ப் அளித்துவிட்டது. இந்த இரண்டு பிரமாண்ட நிறுவனங்களும் இணைந்து நடுத்தர பைக் ரகங்களை அறிமுகப்படுத்த இருக்கின்றன. முதல்கட்டமாக இந்தியாவில் 15 டிரியம்ப் ஷோரூம்களின் தரவுகள் இனி பஜாஜ் நிறுவனம் நிர்வகிக்க இருக்கிறது. எளிமை மற்றும் பரவலாக காணப்படும் பிராண்டான பஜாஜ் நிறுவனத்துடன் கைகோர்க்கும் டிரியம்ப், மகாராஷ்டிராவில் உள்ள பஜாஜ் நிறுவன ஆலையில், இந்தாண்டு கூட்டு பைக் ரகங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது பஜாஜ் வசம் இருக்கும் கிளைகளிலேயே அதாவது 120 நகரங்களில் டிரியம்ப் டீலர்ஷிப்பும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் டிரியம்ப் வகை பைக்குகள் பஜாஜ் ஷோரூமில் காண முடியும் என்கிறது புள்ளிவிவரம். கே.டிஎம்.பஜாஜ், சீட்டாக் பஜாஜ் திரீவீலர்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஏற்கனவே டிரியம்ப் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பஜாஜ் போன்ற ஒரு முன்னணி நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதால் டிரியம்ப் வகை பைக்குகள் இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.