30% வருமான வரி வரம்பில் இவ்ளோபேரா…
நடப்பு நிதியாண்டில் 30விழுக்காடு வருமான வரி செலுத்த தகுதி படைத்தவர்களாக 60லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எவ்வளவுபேர் மிகவும் வசதியாக இருக்கிறார்கள் எத்தனை லட்சம் பேர் அதிக வருமானவரி செலுத்துகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார்.அதில் 60 லட்சம் பேர் செல்வ செழிப்பாக சம்பாதிக்கின்றனர் என்றும் 30விழுக்காடு வரி செலுத்த தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டு 48.4லட்சம் பேர் மட்டுமே இந்த உச்சகட்ட வரம்பில் இருந்ததாகவும், தற்போது இந்த எண்ணிக்கை 60லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பழைய வருமானவரி செலுத்தும் முறையில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தாலே வரி செலுத்தும் சூழல் இருந்தது என்றும், புதிய வருமான வரி செலுத்தும் முறையில் இந்த தொகை 15 லட்சம் ரூபாயாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ம் நிதியாண்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 27.1 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்றும், 2021 நிதியாண்டில் அது 20 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக இருந்ததாகவும் அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. பான் எண்ணையும் ஆதாரையும் இணைத்ததால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.