ஸ்டீல் துறைக்கு வருகிறது ஊக்கத் தொகை..
ஸ்டீல் துறையை ஊக்குவிக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் ஃபகன் சிங் குலஸ்டே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஸ்டீல் துறைக்கான தேவை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், இறக்குமதி அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மூலதன பொருட்கள் விலை உயர்வு கடுமையாக இருந்ததாகவும் , உலகளவில் நிலவும், சமநிலையில்லாத சிக்கல்களால் ஸ்டீல் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2020-21 காலகட்டத்துக்கு பிறகு ஸ்டீல் துறை பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்தாண்டு ஏப்ரல்-நவம்பரில் மூலதன ஸ்டீல் 94.01 மில்லியன் டன்னாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 14.5%அதிகரித்துள்ளது. முடிவுற்ற ஸ்டீலின் விலை 14விழுக்காடு உயர்ந்து 86.97மில்லியன் டன் அளவாக உயர்ந்திருக்கிறது. 2030ஆம் ஆண்டுக்குள் 300 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு ஸ்டீல் உற்பத்தியை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இருந்து 161 மில்லியன் டன் ஸ்டீல் மட்டுமே உற்பத்தியாகிறது.
இதனால் ஸ்டீல் துறையை மட்டும் உயர்த்த 2.0 திட்டத்தின் மூலம் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை அளிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. ஸ்டீல் உற்பத்தியில் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை பயன்படுத்த இருப்பதாகவும் மத்திய இணையமைச்சர் தெரிவிக்கிறார். ஏதேனும் பிரச்னை இருந்தால் அதனை சீரமைக்க மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக அமைச்சர் தெரிவித்தார். ஸ்டீல் துறை 15 விழுக்காடு வரை வளர்ச்சி அடைந்திருப்பதாகவும், உள்கட்டமைப்பு, உற்பத்தி, ஆற்றல் துறைகளில் கணிசமாக உயர்வு ஏற்பட்டுள்ளது.