10 ஆண்டுகளில் வருமானம் 3 மடங்காக உயர்ந்திருக்கிறதாம்..
இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினரின் வருமானம் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருப்பதாக பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.2011 மற்றும் 2022 நிதியாண்டின் வருமான வரி கணக்கு தாக்கலை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 2011-இல் சராசரி ஆண்டு வருமானம் 4.4 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் தற்போது இது 13 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. குறைந்த வருவாய் கொண்ட நிலையில் இருந்தவர்கள் வருவாய் கணிசமாக கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்திருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2047ஆம் ஆண்டில் இந்தியாவில் தனிநபரின் வருமானம் 7 மடங்கு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பொருளாதாரம் உயர அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிக முதலீடு செய்யப்படவும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி கணித்துள்ளது.