வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் மேலும் நீட்டிப்பு!
2021-22 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய, முதலில் ஜூலை 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பலரும் வருமான வரியை ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய முடியாமல் அதை நீட்டிக்க வேண்டுகோள் விடுத்தனர்.
அதையொட்டி மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்திருந்தது..
இது போதாதென்று இன்போசிஸினால் புதுப்பிக்கப்பட்ட வருமான வரித்துறையின் புதிய இணையதளம் (https://www.incometax.gov.in/), தொடங்கப்பட்டதிலிருந்தே பல சிக்கல்களை கொடுத்தது. இந்த சிக்கல்களை சரி செய்ய இன்போசிஸ்க்கு செப்டம்பர் 15 வரை கால அவகாசம் வழங்கினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்நிலையில் வரியை தாக்கல் செய்வதற்கான இந்த கால அவகாசமும் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைப் பலரும் வரவேற்றுள்ளனர்.
Feature image courtesy – Photo by Markus Winkler on Unsplash