வேலையில்லாதவர்களின் விகிதம் அதிகரிப்பு.!!!
தகுதி வாய்ந்த நபர்கள் பட்டம் பெற்றும் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை கொடுமையிலும் கொடுமை ஆனால் அந்த விகிதம் நவம்பரில் 8 %ஆக உயர்ந்துள்ளது. அக்டோபரில் இந்த விகிதம் 7.7%ஆக இருந்தது இதனை இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பான CMIE தெரிவித்துள்ளது நகர்புறங்களில் வேலையில்லாதவர்களின் விகிதம் கடந்த அக்டோபரை விட சற்று அதிகரித்து அதாவது 7.21%இருந்து 8.96%ஆக உயர்ந்தது. இதேபோல் கிராமபுறங்களில் வேலேயில்லாத நபர்களின் விகிதம் 8.04-ல் இருந்து சற்று குறைந்து 7.55%ஆக உள்ளது. மாதந்தோறும் எவ்வளவு பேருக்கு வேலை இல்லை என்பது குறித்து அரசு எந்தவித தெளிவான புள்ளி விவரங்களையும் வெளியிடாதபோது CMIE அமைப்பின் அறிக்கை நாடு முழுவதும் உள்ள பொருளாதார நிபுணர்களுக்கு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. மும்பையில் இருந்து வெளியாகும் இந்த அறிக்கை திட்டம் வகுப்போருக்கு மிகச்சிறந்த உதவியாக அமைகிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது.