ஆள் இல்லாமல் காற்றுவாங்கும் மால்கள் அதிகரிப்பு..
இந்தியாவில் மக்கள் நடமாட்டம் இன்றி காற்று வாங்கும் சிறிய மால்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பொருட்களை மக்கள் ஆன்லைனில் வாங்கிவிடுவதால் மால்கள் காற்று வாங்குவதாக ஒரு ஆலோசனை நிறுவனம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. 40 விழுக்காடுக்கும் அதிகமான கடைகள் காலியாகவே இருக்கும் மால்களுக்கு கோஸ்ட் மால் என்று பெயர். கடந்த 2022-ல் 57 ஆக இருந்த கோஸ்ட்மால்கள் தற்போது 64 ஆக உயர்ந்துள்ளன என்கிறது நைட் ஃபிராங் இந்தியா என்ற அமைப்பு. ஷாப்பிங் மால்களின் பக்கம் மக்கள் செல்லும் விகிதம் வெகுவாக குறைந்துள்ளதால் பலருக்கு வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனியாரின் பங்கு மட்டும் 60 விழுக்காடாக இருக்கிறது. கடந்த காலாண்டில் மட்டும் உள்நாட்டு உற்பத்தி வெறும் 3.5 விழுக்காடு மட்டுமே வளர்ந்துள்ளது. இந்திய பொருளாதாரம் 8.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பல ஷாப்பிங் மால்கள் மூடப்படும் நிலையில் உள்ளது. திங்க் இந்தியா, திங்க் ரீட்டெயில் 2024 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 29 முன்னணி நகரங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. புதுப்புது பெரிய மால்கள் வந்துவிட்டதால் சிறிய மால்களின் உரிமையாளர்கள் கட்டிய கட்டடத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். 1 லட்சம் சதுரடி அளவு கொண்ட ஷாப்பிங் மால்களில் 132 மால்கள் கோஸ்ட் மால்களாக மாறும் நிலையில் உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. 2022-ல் 33.5விழுக்காடாக இருந்த காலியான கடைகளின் எண்ணிக்கை கடந்தாண்டு 36.2விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. பெரிய ஷாப்பிங் மால்கள் காலியாக இருக்கும் விகிதம் வெறும் 5 விழுக்காடாக மட்டுமே இருக்கிறது.
டெல்லி, மும்பை, பெங்களூருவில் ஷாப்பிங் மால்களின் எண்ணிக்கை 263 ஆக குறைந்திருக்கிறது. 8 புதிய மால்கள் வந்தாலும் 16 மால்கள் மூடப்பட்டுவிட்டன.