சீனாவுக்கு அதிகரிக்கும் அழுத்தம்
சீனாவில் இருந்து நிதி அதிகளவில் வெளியேறி வருவது அந்நாட்டுக்கு மட்டுமின்றி உலகநாடுகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த ஒரே மாதத்தில் 49 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி சீனாவில் இருந்து வெளியேறியுள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பணமதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. உள்நாட்டு பண கையிருப்பும் குறைந்துள்ளதால் அந்நாட்டு சந்தைகளும் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது சீனாவின் பணமதிப்பு சரிந்திருந்தது.பல்வேறு அரசியல் தடைகளும் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டது.
5விழுக்காடு வளர்ச்சியை கூட எட்டமுடியாமல் சீன பொருளாதாரம் தடுமாறி வருகிறது. சீனாவின் கடன் பத்திரங்களின் அளவு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4 ஆண்டுகளில் இல்லாத குறைவான அளவை எட்டியுள்ளது. கடந்தாண்டு பாதியில் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் விலகியதில் இருந்தே பொருளாதாரம் மந்தநிலையில்தான் இருக்கிறது. சுற்றுலா துறை என்பது சீனாவின் வருமானத்திற்கு பெரிய பங்களிப்பை அளிக்கிறது. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலகினாலும், சுற்றுலா பயணிகள் சீனாவுக்கு செல்ல தயக்கம் காட்டி வருவதும் பொருளாதாரம் சரிய முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தாண்டில் மட்டும் சீனாவின் பண மதிப்பு 5% சரிந்திருக்கிறது. சீனாவில் இருந்து அதிகளவு பணம் வெளியேறியுள்ளது. விரைவில் அது இயல்புநிலைக்கு திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.