அசத்தலாக உயர்ந்த இந்திய சந்தைகள்
இந்திய பங்குச்சந்தைகளில் ஏப்ரல் 27ம் தேதி நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 349 புள்ளிகள் உயர்ந்து 60649 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 101 புள்ளிகள் அதிகரித்து 17915 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. துவக்கத்தில் உலகளாவிய சூழலால் சரிந்திருந்த இந்திய சந்தைகள் இரண்டாவது பிற்பகுதியில் ஏற்றம்பெற்றன. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய சந்தைகளில் பங்குகளை வாங்கும் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மின்சாரத்துறையைத் தவிர்த்து மற்ற அனைத்தும் அதாவது ஆட்டோமொபைல், மருந்து, ரியல் எஸ்டேட் துறை உள்ளிட்ட பங்குகள் அரை விழுக்காடு உயர்ந்தன. பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகள் அதிகபட்சமாக 2.54 விழுக்காடு லாபம் சந்தித்தது. தங்கத்தின் விலை கிராமுக்கு 2 ரூபாயும்,சவரனுக்கு 16 ரூபாயும் சரிந்தது. ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் 5 ஆயிரத்து 640 ரூபாய்க்கும், 45120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.வெள்ளி விலையானது. முன்தின விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது.அதாவது ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 20 காசுகளுக்கும், கட்டி வெள்ளி 80 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மேல் கூறிய விலையுடன் 3 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் ஒவ்வொரு கடையில் ஒவ்வொரு செய்கூலி சேதாரம் இருக்கும் என்பதையும் அதனை மேலே கூறிய விலையுடன் சேர்த்தால் வருவதே நிஜமான தங்கம் விலை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.