திறமை தகுந்தபடி இன்கிரிமண்ட்..!!!
இது டெக் காலம், புதுப்புது டெக்னாலஜிகளை கற்றுக்கொள்ளாவிட்டால் வருத்தப்படுவது நிச்சயம்.இது மக்களுக்கு சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, டெக் பணியாளர்களுக்கும் மிகமுக்கியமான தேவையாகும். இதனால்தான் விப்ரோ நிறுவனத்தில் புதுப்புது திறமைகளை கற்றுக்கொள்ள அந்நிறுவனம் பணியாளர்களை ஊக்குவிக்கிறது. ஜெனரேட்டிவ் AI மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகிய துறைகளில் நுனுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்று அந்த நிறுவனம் தனது பணியாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. அதிக தொகை சம்பளமாக வேண்டுமானால் இந்த இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கினால் சம்பள உயர்வு அதிகம் என்று அந்த நிறுவன மனிதவளத்துறை அதிகாரி சவ்ரப் கோவீல் தெரிவித்துள்ளார். இந்த திறமை உள்ள பணியாளர்களுக்கு நேரடியாக 30விழுக்காடு கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தங்கள் நிறுவனத்தில் மனிதவளம் சார்ந்த 80 விழுக்காடு பணிகளுக்கே பாட்ஸ்தான் பயன்படுத்தப்படுகிறது என்றார். கடந்த 2 ஆண்டுகளாக படித்து முடித்து எடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு பாதி சம்பளம்தான் தருவோம் என அடிமாட்டு விலைக்கு பணியாளர்களை சேரச் சொன்ன இதே விப்ரோ நிறுவனம் ஜினரேட்டிவ் ஏஐ மற்றும் சைபர் செக்யூரிட்டி பற்றி தெரிந்திருந்தால் 30விழுக்காடு கூடுதல் சம்பளம் தருவது எந்த வகையில் நியாயம் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.