இயல்பை விட அதிகமாக வாங்கப்படும் ரஷ்ய எண்ணெய்
அமெரிக்கா முன்பு கணித்திருந்ததை விட சீனாவும், இந்தியாவும் அதிகமான ரஷ்ய எண்ணெயை வாங்கக்கூடும், இது உலகளாவிய சந்தைகளில் விலை சரிவுக்கு வழிவகுக்கும் என்று ஜனாதிபதி ஜோ பிடனின் பொருளாதார ஆலோசகர்களில் ஒருவர் கூறினார்.
பிடனின் பொருளாதார ஆலோசகர்கள் கவுன்சிலின் தலைவரான சிசிலியா ரோஸ் புதன்கிழமை அளித்த பேட்டியில் ”நாங்கள் நம்புவதை விட ரஷ்ய எண்ணெயை அதிகமாக இந்தியாவும், சீனாவும் வாங்குகிறது. இதனால் சந்தையில் அதிக விநியோகம் உள்ளது” என்று கூறினார்.
இதனிடையே எரிசக்தி செயலாளர் ஜெனிஃபர் கிரான்ஹோல்ம் எரிசக்தி துறை தலைமை நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.