உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிக விமானம் வாங்கப்படுகிறதாம்…
உலகிலேயே அதிக விமானங்களை வாங்கும் நாடாக இந்தியா திகழ்கிறது.இந்த ஓராண்டில் மட்டும் ஆயிரம் விமானங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உலகிலேயே இரண்டாவது பிசியான விமான நிலையமாக திகழ போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. Hartsfield-Jacksonஅட்லாண்டா விமான நிலையம்தான் உலகிலேயே மிகவும் பிசியான விமான நிலையம் திகழ்கிறது. இந்தியாவில் ரயில்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் விமானங்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. மிகப்பெரிய முதலீடுகள் விமானத்துறை பெற்று வருகிறது.உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாற இருக்கும் நிலையில் புதிய விமானங்களின் தேவை அதிகரிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தியாவில் 3%மக்கள் அடிக்கடி விமானத்தில் பயணிக்கும் அளவுக்கு வசதி வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்தியாவில் இருந்து விமானத்தில் அதிகம் பறப்போருக்கான பட்டியலில்,ஊழியர்கள்,மாணவர்கள்,பொறியாளர்கள் அடிக்கடி பறப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் விமானத்துறையின் வளர்ச்சியில் இந்தியாவுக்கு அடுத்த 2,3 ஆண்டுகள் மிகவும் முக்கியம் என்று காபா இந்தியா என்ற நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அடுத்த சில ஆண்டுகளில் விமான நிறுவனங்கள் லாபகரமாக மாற வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கணித்திருக்கின்றனர். இந்திரா காந்தி விமான நிலையம் மிகப்பெரியதாக விரிவடைய இருக்கிறது.லக்கேஜ்களை கையாள கடந்த 2018ஆம் ஆண்டே தானியங்கி வசதிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு மணி நேரத்துக்கு 6 ஆயிரம் லக்கேஜ்கள் வரை இந்த புதிய வசதியால் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இந்திய விமானத்துறை விரிவடைந்து வரும் நிலையில் இரண்டு நிறுவனங்கள் பயங்கரமாக பலனடைய இருக்கின்றன. ஒன்று ஏர்பஸ் மற்றொன்று போயிங்,இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் அதற்கு ஏற்றபடி ஆர்டர்களை குவித்து வருகின்றனர்.கடந்தாண்டுக்கு பிறகு இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 36%வரை உயர்ந்திருக்கிறது. அஜர்பைஜான், கென்யா,வியட்நாமுக்கும் நேரடி விமானங்கள் இயக்கப்படுவதால் வெளிநாடுகளுக்கு செல்வோர் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 -இல் இருந்து 148 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனாவுக்கு முன்பு இருந்த அளவுக்கு விமானங்களில் மக்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளதால் விமான பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது