உலக வர்த்தக அமைப்பில் (WTO) நிர்பந்திக்க முடியாது – பியூஷ் கோயல்
இந்தியாவை உலக வர்த்தக அமைப்பில் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட அழுத்தம் கொடுக்க முடியாது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், எச்சரித்தார்.
உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயம், மீன்வளத்துறை மானியங்கள், கோவிட்-19 தடுப்பூசிகள் மீதான காப்புரிமை தள்ளுபடி மற்றும் தொற்றுநோய், மின் பரிமாற்றத்திற்கான சுங்க வரி ஆகிய நான்கு கருப் பொருள்களில் கோயல் மற்றும் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முழுமையான அமர்வில், வளம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக வளரும் நாடுகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, பொது உணவுப் பொருள்கள் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, நடந்துகொண்டிருக்கும் 12வது அமைச்சர்கள் கூட்டத்தின் முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று கோயல் நாடுகளை வலியுறுத்தினார்.
வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் கடுமையான வேறுபாடுகளுக்கு மத்தியில் முக்கிய பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயாராக உள்ள நிலையில், மையத்தில் நடைபெறும் நான்கு நாட்கள் பரபரப்பான பேச்சுவார்த்தையின் போது ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான விவாதங்களுக்கு இந்தியா திறந்திருக்கும் என்று கோயல் கூறினார்
கோவிட்-19 தடுப்பூசிகள் மீதான காப்புரிமை விலக்குக்கான கோரிக்கை மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் திங்கள்கிழமை நடைபெறும்.
WTO இன் 164 உறுப்பு நாடுகள் செவ்வாயன்று மீன்வளம் மற்றும் விவசாயம் பற்றி விவாதிக்கும்,
அமைச்சர்கள் மாநாட்டில் WTO DG Ngozi Okonjo-Iweala, USTR கேத்தரின் டாய் மற்றும் தென்னாப்பிரிக்க வர்த்தக அமைச்சர் இப்ராஹிம் படேல் ஆகியோரையும் கோயல் சந்தித்தார்.