ஆப்பிளின் கண்ணோட்டத்தை மாற்றிய இந்தியா..
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை சிறிய சந்தையாகவே இரண்டாம்பட்சமாகவே பார்த்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து ஆப்பிள் நிறுவனத்துக்கு வருமானம் கொட்டோ கொட்டு என கொட்டி வருகிறது. கடந்த காலாண்டில் இந்தியாவில் இருந்து மட்டும் குறிப்பிடத்தகுந்த பெரிய தொகை வருவாயாக ஆப்பிள் நிறுவனத்துக்கு கிடைத்திருக்கிறது. கடந்தவாரம் ஆப்பிள் நிறுவனத்தின் இந்கிய வருமானம் குறித்து ஆராயப்பட்டது. அப்போது பேசிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம்குக்., இந்தியாவில் இருந்து இரண்டு இலக்கங்களில் லாபம் வந்திருக்கிறது என்றார். ஆப்பிள் போன்களை வாங்கும் அளவுக்கு இந்தியர்களில் பலர் நடுத்தர குடும்பத்தினராக மாறியுள்ளனர் என்றும்,ஏராளமான நல்ல விஷயங்கள் இந்தியாவில் நடந்துள்ளது என்றும்,இந்தியாவில் இரண்டு நேரடி ரீட்டெயில் விற்பனை நிலையங்கள் திறந்திருப்பதாகவும் ஆப்பிள் நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது.
2013 ஆம் ஆண்டு வெறும் 10 லட்சம் ஐபோன்கள்தான் இந்தியாவில் விற்கப்பட்டு வந்ததாகவும், தற்போது இந்தாண்டில் மட்டும் இந்தியாவில் 80 முதல் 90 லட்சம் போன்கள் விற்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் டிம் குக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆப்பிளின் சந்தை பங்களிப்பு 1.5%-இல் இருந்து 6%ஆக உயர்ந்திருப்பதாகவும் டிம்குக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு இருந்ததைவிட 10 மடங்கு அதாவது 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஆப்பிளுக்கு கிடைத்திருக்கிறது. இந்தியாவில் தனிநபர் வருமானம் என்பது 2008-ல் சராசரியாக 3,500 டாலர்களாக இருந்தது. தற்போது அது 7ஆயிரம் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. இந்தியர்கள் 2 அல்லது 3 ஆவது ஸ்மார்ட் போன்களை மாற்றி வருகின்றனர். அதில் சிலர் முதன்முறையாக ஆப்பிள் போன்களுக்கு மாறி வருகின்றனர். இது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது மட்டுமின்றி உற்பத்தியை பொருத்த வரை,பாக்ஸ்கான், பெகட்ரான்,விஸ்ட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை செய்ய ஆர்வம் காட்டுவதும் ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியாவை பிடிக் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஆப்பிள் போன்கள், உபகரணங்கள் மட்டுமின்றி, ஆப்பிள் டிவி பிளஸ்,ஆப்பிள் ஃபிட்னஸ்,ஆப்பிள் மியூசிக் உள்ளிட்ட சேவைகளும் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனால் குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்று விஜய் சேதுபதி சொல்லும் ஸ்டைலில் இப்போது டிம்குக் ரெம்ப ஹாப்பியா இருக்காப்ல..,