ஸ்வாப் பேட்டரி – சார்ஜ் செய்வதை எளிதாக்கும் தீர்வு
போதுமான மின்சார வாகனங்கள், பவர்பேக்குகள் அல்லது மூலதனம் இல்லாதிருக்கலாம், ஆனால் இந்தியா மின்மயமாக்கலுக்கு ஒரு சுலபமான வழியைக் கண்டறிந்துள்ளது.
அது ஸ்வாப் பேட்டரி. சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளுக்கு வெற்று பேட்டரிகளை மாற்றிக் கொள்ளக்கூடிய தீர்வு.
இந்தியாவைப் பொறுத்தவரை, போக்குவரத்து உமிழ்வைக் குறைப்பதற்கும் அதன் மின்சார தடத்தை அதிகரிப்பதற்கும் ஸ்வாப் பேட்டரிகள் உதவக்கூடும்.
தற்போதைக்கு, இந்திய வாகன சந்தையில் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் ஆதிக்கம் செலுத்துவதால், சிறிய பவர்பேக்குகளை சார்ஜ் செய்வதையும் மாற்றுவதையும் எளிதாக்குகிறது. கூடவே பயனர்களுக்கு பயணச் செலவுகளைக் கடுமையாகக் குறைக்கிறது.
தரத்தைப் பராமரிக்க பேட்டரிகளின் வகைகள், ஓட்டுநர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் பாதுகாப்பிற்கான காப்பீடு மற்றும் அதிக விலையுள்ள பவர்பேக்குகளுக்கு சிறந்த வரிச் சலுகைகளை வழங்குதல் வேண்டும். கூடுதலாக, சீனாவில் உள்ளதைப் போல, அரசு நிறுவனங்கள் இதில் ஈடுபட வேண்டும்.
இந்தியாவிற்கு நீண்ட கால சவாலாக இருப்பது, கார்களுக்கான பேட்டரி ஸ்வாப்பிங்கை திறம்பட பயன்படுத்த முடியுமா என்பதுதான்.
ஏனெனில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் ஒரே ஒரு பேட்டரி நிலையத்தை அமைத்த பிறகு திட்டத்தை கைவிட்டது. ரெனால்ட்-நிசான் 2011 இல் இஸ்ரேலில் தனது முதல் நிலையத்தைத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திவால்நிலைக்கு விண்ணப்பித்தது, சீனாவில், நியோ இன்க் நிறுவனம் நாடு முழுவதும் 197 நகரங்களில் 960 பேட்டரிகளை மாற்றும் நிலையங்களை நிறுவியுள்ளது. ஆனால் ஸ்வாப் ஸ்டேஷன்களுடன் தொடர்புடைய இழப்புகள் இப்போது அதிகரிக்கும் என்று நியோ எதிர்பார்க்கிறது,
இந்தியா இப்போது என்ன செய்யப் போகிறது?