இந்தியா தான் வெயிட்டு…
உலக நாடுகளின் பொருளாதார நிலை குறித்து மார்கன் ஸ்டான்லி நிறுவனம் ஆராய்ந்து தரம் பிரிக்கிறது. இந்த நிலையில் இந்தியாவை ஓவர் வெயிட் என்ற பிரிவில் வைத்துள்ளது. சீனாவை தரம் குறைத்துள்ளது. உள்நாட்டில் வலுவான பொருளாதார நிலை இந்தியாவில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 6.2%ஆக உயரும் என்றும் அந்த நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை கூறுகிறது.அமெரிக்கா, ஜப்பான், தைவானின் முதலீடுகள் இந்தியாவில் குவிகின்றன. ஏற்றுமதி அளவு இந்தியாவில் அதிகரித்து உள்ளது என்றும் மார்கன் ஸ்டான்லி நிறுவனம் ஆராய்ந்துள்ளது. இந்தியாவில் தனியார் எக் ஈக்விட்டி அதிகரிப்பு பெற்றுள்ளது. சீனாவில் உள்நாட்டு உற்பத்தி சரிந்துள்ளது. சீனாவில் வேலை செய்யும் மக்களின் வயது குறைந்து வருகிறது. இந்தியாவில் ரிஸ்க் கேபிடல் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளது சீனாவில் உள்நாட்டு உற்பத்தி சரிந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்ப வளர்ச்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றாலும் நிலைமையை கண்காணிப்பது முக்கியம் என்கிறது மார்கன் ஸ்டான்லி நிறுவனம்.