இந்தியா சின்ன மார்க்கெட்டாம்…
இந்தியாவின் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்துக்கு கிட்டத் தட்ட 40 லேப்டாப் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்த சூழலில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை இந்தியாவில் தொடங்க முன்வரவில்லை. ஏனெனில் இந்தியாவில் ஸ்மார்ட் போன்களுக்கு இருக்கும் வரவேற்பு லேப்டாப்களுக்கு இல்லை என்று இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் லேப்டாப் சந்தை வெறும் 2.4%மட்டுமே என்று இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை சீனா மற்றும் வியட்நாமில் தான் இந்த நிறுவனங்கள் தங்கள் லேப்டாப்களை உற்பத்தி செய்து வருகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் மற்றும் மேக்புக் கணினிகளை பிரபல BYD என்ற சீன நிறுவனம்தான் அசம்பிள் செய்து வருகிறது. இதே நிறுவனம் இந்தியாவில் 2021-ல் ஆலையை தொடங்கியது ஆனால் அப்போது சீனாவுடன் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சீன நிறுவனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இந்தியாவுக்கு பதிலாக பிஒய்டி நிறுவனம் தனது ஆலையை வியட்நாமில் தொடங்கியது.இந்தியாவில் 294 பில்லியன் வருமானத்தில் ஸ்மார்ட் போன்களின் பங்களி்ப்பு மட்டும் 157 பில்லியன் டாலராக இருக்கிறது. 2021-ல் தரவேண்டிய 900 கோடி நிலுவைத் தொகையே இதுவரை கிடைக்காததால் சாம்சங் நிறுவனமும் இந்தியாவில் லேப்டாப் தயாரிக்க தயக்கம் காட்டி வருகிறது. உலகத்தரம் வாய்ந்த லேப்டாப்களை தயாரிக்கும் அளவுக்க தரக்கட்டுப்பாடுகள் போதுமானதாக இல்லை என்றும் அந்த துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா அளிக்கும் PLI திட்டம் என்பது 17ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக உள்ளது. இதனை பெற 40 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதில் 33 நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களாகும். 22,890 கோடி ரூபாய் அளவுக்கு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.