வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா:உலக வங்கி
நாடுகளுக்கு தேவையான வளர்ச்சிப்பணிகளுக்கான நிதியை அளிப்பதில் உலகவங்கியின்பங்கு முக்கியமானதாக உள்ளது. இந்த சூழலில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி உலகவங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய பொருளாதாரம் மிகவும் வலுவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த வங்கி முதல் 3 காலாண்டுகளில் அமோக வளர்ச்சி இருக்கும் என்றும், 2024-ம் ஆண்டு உள்நாட்டு உற்பத்தி 6.3விழுக்காடாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நடப்புக்கணக்கு பற்றாக்குறை 5.2விழுக்காடக இருக்கும் என்றும் அந்த வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 2023 முழு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.9விழுக்காடாக இருக்கும் என்றும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி பெறும் விகிதம் 7.7விழுக்காடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு பணவீக்கம் என்பது 6.3-ல் இருந்து 2024ம் நிதியாண்டில் 5.2 ஆக சரிய வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. உள்நாட்டு தேவை அதிகரிப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிக முதலீடு உள்ளிட்ட காரணங்களால் இந்தியா வலுவான நிலையில் இருப்பதாகவும் உலகவங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
உலகளாவிய பிரச்னைகள் காரணமாக இந்தியாவிலும் அதன் பாதிப்பு இருக்கும் என்றும்,பெருந்தொற்றுக்கு பிறகான மந்த நிலையால் வளர்ச்சி மெதுவான கதியிலியே நடப்பதாகவும் உலக வங்கி கூறுகிறது.