இந்திய கோதுமையை துருக்கி நிராகரித்ததற்கான காரணத்தை இந்தியா விசாரிக்கும்
இந்திய கோதுமையை துருக்கி நிராகரித்ததற்கான காரணத்தை இந்தியா விசாரிக்கும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
துருக்கிக்கு அனுப்பப்பட்ட தானியங்களில் ‘ருபெல்லா’ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கப்பலை நிராகரித்ததாகத் துருக்கி தெரிவித்தது,
ஆனால் முதற்கட்ட விசாரணையில் ஐடிசி நிறுவனம் நெதர்லாந்துக்குத்தான் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது என்றும், அங்கிருந்து பின்னர் துருக்கிக்கு தானியங்களை நெதர்லாந்து ஏற்றுமதி செய்துள்ளது என்று தெரிய வந்ததாக பியூஷ் கோயல் கூறினார்.
கோதுமை ஏற்றுமதி நேரடியாக துருக்கிக்கு சென்றதா என்பது முக்கியம், ஏனெனில் அது நெதர்லாந்தில் உள்ள துறைமுகத்தில் தரையிறங்கினால், இந்திய அதிகாரிகளை குறை சொல்ல முடியாது. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த தரம் உள்ளது என்றும் வர்த்தக நிபுணர் ஒருவர் கூறினார். .
நெதர்லாந்து துறைமுகம் மற்றும் இந்திய துறைமுகத்தில் அனுப்பப்படும் ஏற்றுமதிகளை துருக்கி நிராகரித்தால் அது மிகவும் அசாதாரணமானது என்று அவர் மேலும் கூறினார்.
இந்திய கோதுமையை துருக்கி நிராகரித்ததன் பின்னணியில் அரசியல் இருக்கக்கூடும் என்று அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார். பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவளிப்பதால் துருக்கியுடனான இந்தியாவின் உறவு மோசமடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த நிராகரிப்பின் பின்னணியில் அரசியல் இருப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று மற்றொரு நிபுணர் கூறினார்.