27,000 போன்களின் ஏற்றுமதியை தடுத்த இந்திய அதிகாரிகள்!!!
சீனாவின் முன்னணி நிறுவனமான விவோ, தனது ஆலையை இந்தியாவிலும் அமைத்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் உற்பத்தியான விவோ செல்போன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என இந்திய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதாவது செல்போன்களின் மதிப்பை குறைத்துக்காட்டியும், வேறு மாடல் என பதிவிட்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாகவும், டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இது கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது இதன் மதிப்பு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நிலவும் எல்லை பிரச்சனை காரணமாக லடாக்கில் 2020-ல் இருநாட்டு ராணுவத்தினர் இடையே சண்டை நேரிட்டது. இதன் காரணமாக சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது, டெல்லி விமான நிலையத்தில் சீன செல்போன்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பிற செல்போன் நிறுவனங்களும் கலக்கத்தில் உள்ளனர்.
இந்தியா 2026ம் ஆண்டுக்குள் செல்போன்களை ஏற்றுமதி செய்யும் இலக்காக 120 மில்லியன் அமெரிக்க டாலர் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் தயாரான விவோ செல்போன்கள் ஏற்கனவே சவுதி அரேபியா,தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது நிதி மோசடி புகாரில் சிக்கியுள்ள விவோ நிறுவன செல்போன்கள் டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.