இந்திய வங்கி கட்டமைப்பு வலுவா இருக்கு!!!
அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து அதுபற்றி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தர காந்தாஸ் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய சக்தி காந்ததாஸ்,இந்திய வங்கி மற்றும் வங்கிகள் அல்லாத NBFC நிறுவனங்கள் வலுவாக உள்ளதாக கூறினார் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்துக்கு பிறகு அவர் இந்த செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
வங்கிகள் கடன் தரும்போது பின்பற்ற வேண்டிய முறைகளை ஏற்கனவே மத்திய அரசு வகுத்துள்ளதாக கூறியுள்ள சக்திகாந்ததாஸ், சிஆர்ஐஎல்சி என்ற அமைப்பு 5 கோடி ரூபாய்க்கு மேல் கடன் தருவோரின் விவரங்களை ரிசர்வ் வங்கிக்கு உடனடியாக தெரிவித்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கி, எல்ஐசி ஆகிய நிறுவன பங்குகள் தனியார் நிறுவனமான அதானி குழுமத்தில் முதலீடு செய்தது குறித்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட நிலையில் இதுகுறித்து ரிசர்வ் வங்கி அளித்துள்ள விளக்கம் கவனம் ஈர்த்துள்ளது. அதானி குழும நிறுவனத்தில் எவ்வளவு கடன் அளிக்கப்பட்டுள்ளது என்று கடந்தவாரத்தில் நிதியமைச்சர் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்திய வங்கி அமைப்பு வலுவாக உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.