அட்டகாச உயர்வில் இந்திய சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகள், ஏப்ரல் 29 ஆம் தேதி ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 941 புள்ளிகள் உயர்ந்து 74,671 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 223 புள்ளிகள் உயர்ந்து 22,643 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது., தொடக்கம் முதலே இந்திய பங்குச்சந்தைகளும், உலகளாவிய சந்தைகளும் ஏற்றத்திலேயே வணிகம் செய்யப்பட்டது. இதன் விளைவாக பெரிய மாற்றம் இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்டது. தேசிய பங்குச்சந்தையில்Grasim ICICI Bank, IndusInd Bank, SBI, UltraTech Cement,Axis Bank,ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல்HCLTech, Apollo Hospitals, Bajaj Auto, HDFC Life,LTIMindtreeஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. ரியல் எஸ்டேட் துறையைத் தவிர்த்து மற்ற அனைத்து துறை பங்குகளும் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் கண்டன. குறிப்பாக சுகாதாரத்துறை, உலோகம், ஆற்றல், வங்கி மற்றும் எண்ணெய் ,எரிவாயுத்துறை பங்குகள் 0.4 முதல் 2 விழுக்காடு வரை விலை உயர்ந்து முடிந்தன. வங்கித்துறை பங்குகள் கடந்தாண்டு டிசம்பருக்கு பிறகு மிகப்பெரிய லாபத்தை சந்தித்தன.
Aarti Industries, Aditya Birla Capital, Aegis Logistics, Axis Bank, Bank of Maharashtra, Biocon, Canara Bank, CESC, CG Power, Cummins India, Divis Labs, Godrej Industries, Grasim Industries, ICICI Bank, Jamna Auto, Lemon Tree, SBI, Shakti Pumps, Voltas, Zen Technologies உள்ளிட்ட 250க்கும் அதிகமான நிறுவனங்களின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் 240ரூபாய் விலை குறைந்து 53ஆயிரத்து 920 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6740ரூபாயாக உள்ளது.வெள்ளி விலை, கிராமுக்கு மாற்றமின்றி 87 ரூபாய் 50 காசுகளாக விற்கப்படுகிறது.. கட்டி வெள்ளி விலை 87 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.