மூச்சுவிடத் தொடங்கியுள்ள இந்திய சந்தைகள் !!!
கடந்த 4,5 நாட்களாக சரிவில் துவண்டு போய் கிடந்த இந்திய சந்தைகளில் இன்று ஏற்றம் காணப்பட்டது. தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் காணப்பட்டதால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக நேரமுடிவில் 355 புள்ளிகள் உயர்ந்து 57 ஆயிரத்து 989 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 114புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 100 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. உலகளவில் நிலவும் சாதகமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. வாரத்தின் கடைசி வர்த்தக நாள் மார்ச் 17ம் தேதி என்பதால் இப்போது வாங்கிப்போடும் பங்குகள் அடுத்தவாரம் விலை ஏறும் என்ற நம்பிக்கை பல முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது. இதன் விளைாகவே சந்தையில் தகவல் தொழில்நுட்பம், உலோகம், ரியல் எஸ்டேட் மற்றும் நிதித்துறை பங்குகளை வாங்கிக்குவித்துள்ளனர் HCL Technologies, Hindalco Industries, UPL, UltraTech Cement ,Nestle India ஆகிய நிறுவனங்கள் பெரிய லாபத்தை பதிவு செய்தன. Eicher Motors, NTPC, Maruti Suzuki, ITC,ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டமடைந்தன. உலகளவில் பொருளாதாரத்தை நிலைநிறுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் நம்பிக்கை அளித்து வருவதால் பங்குச்சந்தைகள் ஏற்றத்தை கண்டு வருகின்றன.பங்குச்சந்தைகள் சற்றே முதலீட்டாளர்களுக்கு கைகொடுத்தாலும், தங்கம் விலை பலரையும் கவலை அடைய வைத்து வருகிறது. சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 43 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் தங்கம் முன்தின விலையை விட 25 ரூபாய் உயர்ந்து 5450 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. வெள்ளியும் கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து 73 ரூபாய் 10 காசுகளுக்கு
விற்கப்படுகிறது.கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 400 ரூபாய் உயர்ந்து 73 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.(இங்கே கூறியுள்ள விலையுடன் 3விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி, சேதாரம் தனியாக சேர்க்க
வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது)