சரிவுடன் முடிந்த இந்திய சந்தைகள் …
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி குறித்து வெளியான தரவுகள்,உலகளவில் நிகழும் அரசியல் மாற்றங்கள் ஆகியன இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வர்த்தகம் தொடங்கியதும் சாதாரணமாகத்தான் வர்த்தகம் நடந்தது. நேரம் செல்ல செல்ல இந்திய பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன.கடைசி ஒரு மணிநேரத்தில் பங்குகள் பெரிய அளவில் விற்கப்பட்டதால் சந்தைகள் சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 193 புள்ளிகள் சரிந்து 62,428 புள்ளிகளாக வீழ்ச்சிகண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் சரிவு காணப்பட்டது.46 புள்ளிகள் சரிந்த நிலையில் நிஃப்டி வர்த்தக நேர முடிவில் 18,847 புள்ளிகளாக வீழ்ந்தது. Coal India, Kotak Mahindra Bank, Bharti Airtel, SBI Life Insurance ஆகிய பங்குகள் பெரிதாக வீழ்ந்தன. Apollo Hospitals Enterprises, Divis Laboratories, Bajaj Auto, Tata Motors ஆகிய நிறுவன பங்குகள் ஜூன் முதல் நாளில் லாபத்தை பதிவு செய்தன. வங்கிகள் மற்றும் உலோகத்துறை பங்குகள் அரைவிழுக்காடு விழுந்தன. தகவல் தொழில்நுட்பம்,மருந்துத்துறை பங்குகள் அரை முதல் ஒரு விழுக்காடு லாபத்தை பதிவு செய்தன. 150க்கும் அதிகமான பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டன. தங்கத்தை பொறுத்தவரை சவரனுக்கு 200 ரூபாய் விலை குறைந்தது.ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 620 ரூபாயாக தங்கம் விலை இருந்தது. ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரம் ரூபாய்க்கு கீழே சென்றது. ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 960 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலைகிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 60 காசுகளாக உள்ளது.கட்டி வெள்ளி விலைகிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்து 77 ஆயிரத்து 600 ரூபாயாக இருக்கிறது. தங்கம் வாங்கும்போது இங்கே சொல்லியுள்ள விலையுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், செய்கூலியும் சேதாரமும் சேர்க்க வேண்டும், செய்கூலி சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதால் குறைவான செய்கூலி சேதாரம் உள்ள கடைகளில் நகை வாங்குவது சிறந்த யோசனையாகும்.