லைட்டா விழுந்த இந்திய சந்தைகள்!!!
இந்திய பங்குச்சந்தைகளில் மே 11ஆம் தேதி லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 35 புள்ளிகள் சரிந்து 61,904.52 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்து 297 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. டாக்டர் ரெட்டீஸ், எல்அண்ட் டி,ஹிண்டால்கோ,டிவிஸ் லேப் ஆகிய நிறுவனங்கள் பெரிய அளவில் சரிந்தன. அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவன பங்குகள் 4 விழுக்காடு அளவுக்கு உயர்ந்தன. நிஃப்டி வங்கித்துறை பங்குகளில் லேசான உயர்வு காணப்பட்டது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி முன்தின விலையிலேயே விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 5ஆயிரத்து 742 ரூபாய்க்கும்,ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்து 936 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் சரிந்து 82 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கட்டிவெள்ளி கிலோவுக்கு 700 ரூபாய் சரிந்து 82 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையுடன் 3விழுக்காடு ஜிஎஸ்டி சேர்க்கவேண்டும், மேலும் செய்கூலி , சேதாரம் ஒவ்வொரு கடையிலும் மாறுபடும். அதையும் சேர்த்தால்தான் முழுமையான தங்கம் விலை வரும் என்பதை கருத்தில் கொள்ளவும், தங்கத்தை ஆபரணத்தங்கமாக வாங்கினால்தான் இத்தனை வரிகள், செய்கூலி,சேதாரம் எல்லாம், இயன்ற வரை ஆன்லைன் தங்கமாக வாங்குவது முதலீட்டுக்கு சிறந்த யோசனையாகும்.