சரிந்து முடிந்த இந்திய சந்தைகள்..
வாரத்தின் முதல் வர்த்தக நாளில்(ஜூன் 26), இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 9 புள்ளிகள் சரிந்து 62ஆயிரத்து 970 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 25 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்து 691 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ஆட்டோ மொபைல், உலோகம், மருந்து துறை பங்குகள் 1விழுக்காடு உயர்ந்தது. NTPC, Reliance Industries, TCS, Power Grid Corporation ஆகிய பங்குகள் சரிந்தன.Cipla, Hero MotoCorp, Adani Enterprises, Tata Consumer Products பங்குகள் உயர்ந்தன . பங்குச்சந்தைகள் ஒரு பக்கம் சரிந்தாலும் தங்கத்தின் விலை உயர்ந்து வர்த்தகம் நடந்தது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 5470 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 43 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து 75 ரூபாய் 20 காசுகளுக்கு வணிகமானது. கட்டி வெள்ளி விலைகிலோ 75 ஆயிரத்து 200ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரம் சேர்க்கவேண்டும், செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.