வீழ்வேன் என நினைத்தாயோ ஸ்டைலில் இந்திய சந்தைகள்!!!
ஆகஸ்ட் 4ஆம் தேதியான வெள்ளிக்கிழமை,இந்திய சந்தைகள் லாபத்தை பதிவு செய்தன.கடந்த 3 நாட்களாக சரிந்து வந்த இந்திய சந்தைகள் லாபத்தை பதிவு செய்தன. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 480 புள்ளிகள் அதிகரித்து 65,721 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 135 புள்ளிகள் அதிகரித்து 19,517 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.உலகளவில் நிலவும் சூழல் காரணமாக இந்திய சந்தைகளில் முன்னேற்றம் காணப்பட்டது. Cipla, IndusInd Bank, Tech Mahindra, Wipro,Bharti Airtel உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. Maruti Suzuki, SBI, Bajaj Auto, BPCL, NTPC உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டமடைந்தன. மருந்து, தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 1 விழுக்காடு அதிகரித்துள்ளன. ஆட்டோமொபைல், ஆற்றல் துறை பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டன. Tribhovandas Bhimji Zaveri, SML Isuzu, NBCC, Info Edge, Lupin, Karnataka Bank, JK Tyre, Gravita India, Dixon Technologies,Apollo Tyresஉள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சம் தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி கிராம் 5535 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 44280ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 78 ரூபாய் 20காசுகளாக உள்ளது. கட்டிவெள்ளி விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து 78 ஆயிரத்து 200ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு கட்டாய ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி,சேதாரத்தையும் சேர்த்தால்தான் உண்மையான தங்கம்,வெள்ளி விலை தெரியவரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், குறைவான செய்கூலி,சேதாரம் அதே நேரம் தரமான தங்க நகைகள் விற்கும் கடைகளை தேடிப்பிடிப்பது உங்கள் சாமர்த்தியம்தான்.