ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!!
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாகவே லோர் கோஸ்டர் போல அதீத ஏற்றமும் அதீத சரிவும் காணப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தையில் பெரிய ஏற்றம் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது .மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 563 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 656 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18 ஆயிரத்து 50 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தபோதிலும் மும்பை பங்குச்சந்தையில் சந்திரபிரபு நிறுவனம் 10.25% சரிவை சந்தித்தன. அகி இந்தியா என்ற நிறுவனம் 9.85% சரிவை சந்தித்தது. நைகா, அவீர் புட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டன. நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்ததால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.