உச்சம் தொட்ட இந்திய சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள் திங்கட்கிழமை மிகப்பெரிய உயரங்களை தொட்டன. வரலாற்றில் முதன் முறையாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 70 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. இதற்கு முக்கிய காரணமாக வெளிநாட்டு முதலீடுகளை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இதேபோல் தேசியப்பங்குச்சந்தைய குறியீட்டு எண் நிஃப்டி 21 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சார்ந்த தரவுகளில் இந்தியாவின் உற்பத்தி ஆறரையில் இருந்து 7 விழுக்காடாக உயரும் என்று ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியதே இதற்கு முக்கிய காரணமாகும். அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் பாஜக 3 மாநிலங்களில் வென்றதன் விளைவாகவும், அடுத்தாண்டு பொதுத்தேர்தலில் நிலையான அரசு ஆட்சிப்பபொறுப்பை ஏற்கும் என்பதாலும் இந்திய சந்தைகளில் மிகப்பெரிய ஏற்றம் காணப்படுகிறது. டிசம்பரில் மட்டும் இந்திய பங்குச்சந்தைகளில் 3.5 சதவீத வளரச்சிகிடைத்திருக்கிறது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படையில் வங்கிகள் மற்றும் கார்பரேட்கள் மிகவும் வலுவாக இருக்கின்றன. இந்தியாவில் போதுமான வெளிநாட்டு பணங்களும் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த அட்டகாசமான நிலை தொடரும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மும்பை பங்குச் சந்தையில் 350லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும், தேசிய பங்குச்சந்தையில் 346 கோடி ரூபாய் அளவுக்கும் சந்தை மூலதனம் இருக்கிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் 26,505 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை குவித்துள்ளனர். கடந்த நவம்பரில் இந்த முதலீடுகள் வெறும் 9ஆயிரம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது.