லேசாக தலைதூக்கும் இந்திய சந்தைகள்!!!
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச்சந்தைகளில் லேசான முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 126 புள்ளிகள் உயர்ந்து 57 ஆயிரத்து 653 புள்ளிகளாகவும்,தேசிய பங்குச்சந்தை ,குறியீட்டு எண் நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 16,985 புள்ளிகளிலும் வர்த்தகம் முடிந்தது. வர்த்தகம் துவங்கியது முதல் சாதகமான சூழல் காணப்பட்டாலும், கடைசி நேரத்தில் ஆட்டோமொபைல்,ரியல் எஸ்டேட், மற்றும் ஆற்றல்துறை பங்குகள் விற்கப்பட்டதால் சந்தையில் லேசான ஆட்டம் காணப்பட்டது. பாரத ஸடேட் வங்கி, Grasim Industries, Reliance Industries, Cipla, Sun Pharma உள்ளிட்ட நிறுவன பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் ஏற்றம் கண்டன. அதானி போர்ட்ஸ்,பவர்கிரிட்,டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிந்தன. மருந்துத்துறை பங்குகள் 1விழுக்காடு அளவுக்கு ஏற்றம் கண்டன சர்வதேச சந்தை நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே இந்திய சந்தைகள் மாறி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தங்கம் விலையும் லேசான சரிவிலேயே காணப்பட்டது. மார்ச் 27ம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ரூபாய் சரிந்து 5 ஆயிரத்து 540 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளிவிலை சனிக்கிழமை விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 76 ரூபாய்க்கே விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி 76 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தங்கம் விலையுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரம் கூடுதலாக சேரும் என்பதை கணக்கில் கொள்ளவும்.