அட்டகாசமாக உயர்ந்த இந்திய சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5ஆவது நாளாக உயர்வுடன் வர்த்தகத்தை முடித்துள்ளது.செப்டம்பர் 7ஆம் தேதி இந்திய சந்தைகளில் பெரிய முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 385 புள்ளிகள் உயர்ந்திருக்கின்றன.இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 116 புள்ளிகள் உயர்ந்திருக்கின்றன. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 66,256 புள்ளிகளாகவும்,நிப்டி 19,727 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை முடித்தன.துவக்கத்தில் தடுமாறினாலும், பிற்பாதியில், வங்கிகள், ஆற்றல் துறை,ரியல் எஸ்டேட் துறைகளில் மிக வேகமான வளர்ச்சி காணப்பட்டது.Coal India, L&T,Tech Mahindra IndusInd Bank, SBI Life Insurance உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்ந்து முடிந்தன. Infosys, Tata Consumer Products, M&M, Britannia Industries, Sun Pharmaஉள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிந்தன. மருந்து நிறுவன பங்குகள் தவிர்த்து மற்ற நிறுவன பங்குகள் லாபத்தில் முடிந்தன. பொதுத்துறை வங்கி பங்குகள் 1 முதல் 2%உயர்வை கண்டன.Gail India, Jyoti, Bombay Dyeing, Camlin Fine Sciences, Mazagon Dock Shipbuilders, Larsen & Toubro, D B Realty, Cochin Shipyard, TVS Motor Company, Federal Bank, Sonata Software, Oberoi Realty உள்ளிட்ட 300 நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளன. தங்கம் விலையும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை 5520 ரூபாயாக இருக்கிறது. ஒரு சவரன் 44,160 ரூபாயாக இருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 77 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 77ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் 3விழுக்காடு ஜிஎஸ்டி, செய்கூலி சேதாரம் சேர்க்கப்படவேண்டும், செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆபத்து நேரத்தில் நண்பனைவிட தங்கம் அதிகம் உதவும்,இயன்றவரை முதலீட்டை தங்கத்தில் போடுங்கள்..