கூகுளையே அலற விட்ட இந்திய அமைப்பு!!!
கூகுள் நிறுவனம் அராஜக போக்குடன் ஆதிக்கம் செலுத்தி வருவதாக கடந்த அக்டோபர் மாதம் இந்திய போட்டி ஆணையமான சிசிஐ அமைப்பு பெரிய தொகையை அபராதமாக செலுத்தும்படி உத்தரவிட்டது. இந்த தொகையை இதுவரை செலுத்தாத கூகுள் நிறுவனம் சிசிஐ அமைப்பின் அபராதத்தை எதிர்த்து nclat அமைப்பிடம் மேல்முறையீடு செய்தது. சிசிஐ அமைப்பு விதித்த அபராதமான 2 ஆயிரத்து 274 கோடி ரூபாயை எப்போது செலுத்துவீர்கள், ஏன் இத்தனை தாமதம் என கூகுளுக்கு சிசிஐ அமைப்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 60 நாட்களில் பணத்தை கட்ட வேண்டும் என்று சிசிஐ ஆணையிட்டிருந்த நிலையில்,இதுவரை பணம் தரப்படவில்லை. இந்த நோட்டீஸ் அளித்த 30 நாட்களுக்குள் கூகுள் நிறுவனம் விளக்கத்துடன் பணம் தரவில்லையெனில், கூகுள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்கும் அதிகாரம் உள்ளது. இந்தநிலையில் nclat அமைப்பில் கூகுள் செய்த மேல்முறையீட்டு மனு இதுவரை விசாரிக்கப்படவே இல்லை. இந்தியாவில் கூகுள் பயன்படுத்துவோரின் மிகவும் அதிகம் என்பதால் இந்த அபராதத் தொகையை கூகுள் செலுத்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அண்மையில் பேட்டியளித்த கூகுள் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், இந்தியாவில் உள்ள செல்போன் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் பாதிக்கப்படக்கூடும் என்றும் இதனை கருத்தில் கொள்வதாகவும் பேசியுள்ளார்.