தொடர்ந்து சரிந்து வரும் இந்திய பங்குச்சந்தைகள்
கடந்த வாரத்தில் தொடர்ந்து 8 நாட்கள் ஏற்றம் கண்டு வந்த இந்திய பங்குச்சந்தைகளில் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவு காணப்பட்டது ரிசர்வ் வங்கியின் நாணைய கொள்கை கூட்டத்தில் கடன்களுக்கான வட்டி விகிதம் சற்று அதிகரிக்கப்படும் என்ற தகவல் வெளியானது.இதன் பாதிப்பாக இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு காணப்பட்டது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 208 புள்ளிகள் வீழ்ச்சி கண்டன. அதாவது வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 62 ஆயிரத்து 626 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் சரிவு பிரதிபலித்தது. 58 புள்ளிகள் சரிவை கண்ட நிஃப்டி வர்த்தக நேர முடிவில் 18 ஆயிரத்து 642 புள்ளிகளாக இருந்தது சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் கடைசி வரை முன்னேறவே இல்லை என்பதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்தனர். மிகப்பெரிய சரிவை சந்திக்காமல் பொதுத்துறை வங்கிகள்,மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் துறையும் தான் காப்பாற்றின. இத்தனை பெரிய சரிவிலும் அதானி என்டர்பிரைசர்ஸ், இந்துஸ்தான் யுனிலிவர் லிமிட்டட், உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 1.45%சரிவையும்,உலோகம், மருந்துத்துறை பங்குகள் பூஜ்ஜியம் புள்ளி 5% சரிவை சந்தித்தது.