விழுந்து சிதறிய இந்திய பங்குச்சந்தைகள் !!!
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவதாக வெளியான தகவல்களால் உலகளவில் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளன இதன் பிரதிபலிப்பாகவே இந்திய பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி சார்ந்த தரவுகளும் சரிவை சந்தித்த காரணத்தால் பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் அளவு கணிசமாக குறைந்துள்ளது. அனைத்து துறை பங்குகளும் கடுமையாக வீழ்ந்த நிலையில், மருந்துத்துறை பங்குகள் மட்டும் ஏற்றம் கண்டன, கொரோனா காரணமாக மருந்துத்துறை பங்குகள் அதிக ஏற்றம் கண்டுள்ளன. வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச்சந்தைகள் 1 விழுக்காடு பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தைகள் 600 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தன.மொத்தம் 61ஆயிரத்து 67 புள்ளிகளில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு என் நிஃப்டியிலும் சரிவு பிரதிபலித்தது. எண்ணெய், ஆற்றல் துறை பங்குகள் சரிந்தன. தங்கத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் போக்கும் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக ஆபரணத்தங்கத்தின் விலையும் கிட்டத்தட்ட 41 ஆயிரம் ரூபாயை தங்கம் விலை நெருங்கியது. எண்ணெய் நிறுவன பங்குகளும் சுமார் 2%வீழ்ச்சியை கண்டுள்ளன.