சரிவுடன் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்..காரணம் என்ன?
இந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை பெரிய சரிவை சந்தித்தன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 453 புள்ளிகள் சரிந்து 59ஆயிரத்து900 புள்ளிகளாக வணிகம் நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 133 புள்ளிகள் சரிந்தன. பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் பேசிய தரவுகளால் இந்திய சந்தைகளும் சரிந்தன. கடந்த வாரங்களில் அதிக முதலீடுகளை செய்த முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பதிலேயே ஆர்வம் காட்டி வந்தனர். ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர்தான் உலகளவிலான பொருளாதார மந்த நிலைக்கு முக்கிய காரணிகளாக உள்ளது, இரண்டு நாட்கள் போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்தாலும்,நாங்கள் நிறுத்தமாட்டோம் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளது போரை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. பணவீக்கம் குறித்து நம்பிக்கை இல்லாத வகையில் ரிசர்வ் வங்கி பேசியதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை தகர்ந்துபோயுள்ளது. இது மட்டுமின்றி அமெரிக்க பெடரல் ரிசர்வும்,சாதகமில்லாத அறிவுப்புகளை வெளியிடகூடும் என்று முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு காணப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கள் பங்குகளை விற்கத் தொடங்கினர்.கடந்த 9 அமர்வுகளில் 10ஆயிரத்து500 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்றதும் இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது. இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகளின் மதிப்பு அதிகமாக வைக்கப்பட்டதும் ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. வரும் 9ம் தேதி அமெரிக்க பெடரல் ரிசர்வ், தங்கள் நாட்டு கடன் வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். அமெரிக்க பெடரல் ரிசர்வ் சாதகமான சூழலை பிரதிபலித்தால் இந்திய சந்தைகளிலும் ஏற்றம் காணப்படும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.