காதலர் தினத்துக்கு அடுத்த நாளில் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள்!!!
இந்திய பங்குச்சந்தைகள் பிப்ரவரி 15ம் தேதியான புதன்கிழமை லேசான உயர்வை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்ந்து 61 ஆயிரத்து275 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18 ஆயிரத்து15 புள்ளிகளாக இருக்கிறது. துவக்கத்தில் இருந்து சரிவுடன் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக நேர முடிவில் நல்ல முன்னேற்றத்தை கண்டன. ஆட்டோ,ரியல் எஸ்டேட் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் ஏற்றத்தை கண்டன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தை பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியதும் இந்திய பங்குச்சந்தை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. டெக் மகேந்திரா நிறுவன பங்குகள் 5 %ஏற்றம் கண்டுள்ளன. இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவன பங்குகள் 1.21% சரிவை சந்தித்தன. தங்கம் விலையும் மக்களுக்கு சாதகமான சூழலிலேயே விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 120 ரூரூபாய் சரிந்து விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.42 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 315 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 72 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி கிலோ 500 ரூபாய் சரிந்து 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.