கலந்துகட்டி அடிக்கும் இந்திய பங்குச்சந்தைகள்!!
இந்திய பங்குச்சந்தையில் மே 12-ம் தேதி பெரியளவில் மாற்றம் ஏற்படவில்லை.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 62 ஆயிரத்து 27 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.இது முன்தின வர்த்தகத்தை விட 123 புள்ளிகள் அதிகமாகும். இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 17 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 314 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தொடக்கத்தில் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள் பின்னர் நல்ல லாபத்தை பதிவு செய்தன. வங்கி, நிதி,ஆட்டோமொபைல் துறைகளில் பங்குகள் வாங்கப்பட்டது இந்திய சந்தையில் ஓரளவு சரிவை தடுத்தது.
தங்கம் விலையில் வீழ்ச்சி காணப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 37 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 705 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் 30 காசுகள் சரிந்து 78 ரூபாய் 70காசுகளாக இருந்தது..ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்து 640 ரூபாயாக சரிந்தது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 3 ஆயிரத்து 300 ரூபாய் குறைந்து 78 ஆயிரத்து700 ரூபாய்க்கு விற்பனையானது. மேலே கூறிய தங்கம் விலையில் 3 விழுக்காடு ஜிஸ்டி சேர்க்க வேண்டும், மேலும் ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு நகைக்கும் செய்கூலி,சேதாரம் ஆகியவை வேறுபடும் என்பதால் அவற்றையும் சேர்த்தால் மட்டுமே முழு தங்கம் விலை வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.