எண்ணெய் ஏற்றுமதி & வர்த்தகம்: பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்யா
பிரிக்ஸ் குழுவிலிருக்கும் நாடுகளுக்கு தனது வர்த்தகம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதியை மாற்றியமைக்கும் பணியில் ரஷ்யா இருப்பதாக அதன் அதிபர் விளாடிமிர் புடின் கூறினார்.
14வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை சீனா மெய்நிகர் முறையில் நடத்துகிறது. அப்போது வீடியோ உரையாற்றிய புடின், ரஷ்ய சந்தையில் சீன கார்களின் இருப்பை அதிகரிப்பது குறித்தும், இந்திய சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளை திறப்பது குறித்தும் ரஷ்யா விவாதித்து வருவதாக கூறினார்.
இதனால், பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்யாவின் இருப்பு அதிகரித்து வருகிறது.
“மோதலுக்கான தீர்வு, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுதல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், புதிய தொழில்நுட்பங்களின் குற்றவியல் பயன்பாடு, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல் மற்றும் ஆபத்தான நோய்த்தொற்றுகள் பரவுதல் போன்ற பிரச்சினைகளை நாங்கள் ஒன்றாக மட்டுமே பேசித் தீர்க்க முடியும்” என்று ரஷ்ய அதிபர் இந்த மாநாட்டில் வலியுறுத்தினார்.