தாராளமாக செலவு செய்யும் இந்தியர்கள்…
யுபிஎஸ் என்ற நிறுவனம் இந்தியர்களின் வருமானம் மற்றும் செலவு குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் பண்டிகை காலங்களுக்கு தயாராகிவிட்டதாக கூறியுள்ளனர்.வழக்கமாக இந்தியர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை செய்வதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில்,இந்த முறை சரிவு இருப்பதாக கூறியுள்ளனர். இந்தியர்கள் பண்டிகை நேரங்களில் 27விழுக்காடுக்கு பதிலாக ரொக்கப்பணமாக செலவு செய்ய 35%பேர் விரும்புவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.அதாவது மக்கள் கடைகளில் நேரடியாகசென்று பொருட்களை தொட்டுப்பார்த்து உணர்ந்து வாங்கவே அதிகம் விரும்புவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பண்டிகை நேரம் என்பதால் செலவு செய்யவே விரும்புவதாக 70விழுக்காடு மக்களும் , வழக்கமான வகையிலேயே இப்போதும் செலவு செய்வோம் என 18%பேரும் தெரிவித்துள்ளனர்.11%மக்கள் தங்கள் செலவுகளை குறைக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். இந்தியர்கள் தங்கத்தை வாங்கவே அதிகம் விரும்புவதாக கூறியுள்ளனர். கேள்விகள் கேட்கப்பட்டதில் பாதி பேர் தங்கமே தங்கள் முதல் விருப்பம் என்று தெரிவித்துள்ளனர். பண்டிகை நேரம் என்பதாலும்,திருமண காலம் என்பதாலும் விற்பனை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சிலரோ சொத்துகளை வாங்க அதிக விருப்பம் தெரிவித்துள்ளனர். 50 லட்சம் ரூபாய்க்குள் உள்ள வீடுகளை வாங்க 62% பேர் விரும்புகின்றனராம். செல்போன்கள்,லேப்டாப்கள்,ஸ்மார்ட் போன்கள் ஆகியவை மக்கள் அதிகம் வாங்க விரும்பும் பொருட்களாக உள்ளன. பொருட்களின் விலைவாசி என்பது கடந்த 2 ஆண்டுகளில் 6%வரை உயர்ந்திருப்பதாக கூறியுள்ளமக்கள்.உணவுப்பொருட்கள் திடீரென விலையேறியதும் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பால், பருப்பு மற்றும் காய்கனிகளின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.