லாக்டவுன் காலத்தில் நடுத்தர, ஏழை மக்களைக் காப்பாற்றிய தங்கம்!
தங்கத்தை அடகு வைப்பது காலம் காலமாக உலகமெங்கும் நடக்கிற ஒரு விஷயம். இப்பவும் கோவிட் பெருந்தொற்று நெருக்கடிகளுக்கு மத்தியில பல பேரோட வாழ்க்கையை அவங்க சேத்து வச்சிருந்த தங்கம் தான் காப்பாத்தியிருக்கு. உலகமெங்கும் வேலையிழப்பு, சம்பளம் பாதியாக் குறைக்கப்பட்டது, இதுனால பணப்புழக்கம் ரொம்பக் கொறஞ்சு எல்லாருக்கும் பணம் பெரிய தேவையானதுனால தங்கம் அடகு வச்சு பணம் கொடுக்கிற பிசினஸ் பெரிய லெவல்ல வளந்திருக்கு.
மார்ச் 2020 இல் முடிஞ்சு போன நிதியாண்டுல உலகச் சந்தை நிபுணர்கள் ஒரு கணக்கெடுத்தாங்க. அவங்க கணிப்பின்படி தங்கக்கடன் மார்க்கெட் வருகிற மார்ச் 2022 வரையில், கிட்டத்தட்ட ₹3.44 லட்சம் கோடியில் இருந்து 15.7 % வளர்ச்சி அடைஞ்சு 4.6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மலைக்க வைக்கும் விகிதத்தில் வளரும்னு சொல்றாங்க. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவோட ஒரு அறிக்கைல, மார்ச் 31 உடன் முடிவடைந்த முந்தைய நிதியாண்டில் நாலாவது காலாண்டில் தங்கக் கடன் மார்க்கெட் அதுக்கு முந்தைய நிதி ஆண்டோடு ஒப்பிடும்போது 465.08 % வளர்ச்சி அடைஞ்சு ₹20,900 கோடியாக உயர்ந்திருக்கிறது.
2020 ஜனவரியில ₹18,596 கோடியாக இருந்த அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளுக்கு எதிரான கடன் நிலுவைத்தொகை (அதாங்க, அடகு வச்ச நகையைத் மீட்காம இருக்கிற தொகை) 2021 மார்ச் மாசத்துல ₹60464 கோடியா உயர்ந்திருக்கு. லாக்டவுன் காலத்துல மக்கள் கைல இருந்த தங்க நகைகளை வைத்து வாழ்க்கையை ஓட்டினார்கள், ஆனா, இன்னைக்கு வரைக்கும் நகைகள் திருப்ப முடியாம தேங்கிக் கிடக்கு. ஜனவரி 2020 ல இருந்து மார்ச் 2021 வரைக்குமான காலத்தில் மட்டும் அதாவது கொரானா பெருந்தொற்று கோரத்தாண்டவம் ஆடிய பொழுது மட்டும் இந்த தங்கநகைக்கடன் விகிதம் 225.15 சதவிகிதம் அதிகரிச்சிருக்கு. அதேநேரம் சாதாரண கடன்கள் அதிகரிப்பு என்பது ரொம்ப இயல்பான 8.29 % மட்டும்தான்.
மனப்புறம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நந்தகுமார் 2020 இல் தங்கக் கடன் சொத்துக்கள் 24 % அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார். தங்கக் கடன் மார்க்கெட்டை இது பெரிய அளவில் வளர்ச்சி அடையச் செய்திருக்கிறது என்பது என்னவோ உண்மைதான், ஆனால், இதற்குப் பின்னால் இருக்கும் வலி என்னவென்றால், மக்கள் கைகளில் பணமில்லாமல் தங்கள் மதிப்புமிக்க சேமிப்பான தங்கத்தை வேறு வழியில்லாமல் அடமானம் வைக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதுதான்.
ஒருபக்கம் இதை அவல நிலைன்னு நம்ம சொன்னாலும், நடுத்தர வர்க்க இந்தியர்களின் சுயமரியாதையை, அவர்களின் ஓராண்டு கால வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிய ஆபத்பாந்தவன் தங்கம் தான். கடந்த இரண்டு மாதங்களாக குறிப்பாக ஆகஸ்ட் 2021 இல் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைஞ்சுகிட்டே வர்றதால இந்த தங்கக் கடன் மார்க்கெட் அதோட வேகமான வளர்ச்சியை இழக்கலாம், ஆனா, ஒருநாளும் அது வீழ்ச்சி அடைய வாய்ப்பே இல்லை. தங்கத்தோட ஒட்டுமொத்த சந்தையிலயும் சரி, பங்குச் சந்தையில தங்கப்பத்திரங்களோட “அணிதிரழ்வு” (Rallying) விலை உயர்வு தான் கடன் சந்தைகளின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவியது.