வாங்கி குவிக்கும் இந்தியர்கள்!!!! எதைத் தெரியுமா???
பட்டன் போன்களில் இருந்து டச் போன், டச்சில் இருந்து 3ஜி போன், 3ஜியில் இருந்து 4ஜி,5ஜி என குறுகிய காலத்தில்
இத்தனை அசுர வளர்ச்சி பெற்று, தற்போது டிஜிட்டல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் செல்போன்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பொருளாக ஸ்மார்ட் வாட்ச்கள் உள்ளன. கவுண்ட்டர்பாயின்ட் என்ற நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் ஸ்மார்ட் வாட்ச் விற்பனை கடந்த சில ஆண்டுகளில் 171%உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகரிக்கும் பண்டிகை கால விற்பனை, இந்தியர்கள் மத்தியில் அதிகரித்து வரும் உடல்நலம் குறித்த ஆர்வம் ஆகியவை இந்தியர்களை ஸ்மார்ட் வாட்ச் வாங்க தூண்டியுள்ளது. இந்தியாவிலேயே உற்பத்தி, விலையும் நடுத்தர குடும்பத்தினர் வாங்கும் விலை என்பதால் இந்தியர்களின் மத்தியில் ஸ்மார்ட் வாட்ச் கவனம் பெற்றுள்ளது firebolt, Boat, noise உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்ச்தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்றன. இந்தியாவில் 18 வயது முதல் 24 வயதுள்ளவர்கள் ஸ்மார்ட் வாட்ச்சை விரும்பி வாங்குவதாகவும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. இந்த பண்டிகை காலத்தில் நாய்ஸ் நிறுவனம் மட்டும் சுமார் 20 லட்சம் ஸ்மார்ட் வாட்ச்களை பண்டிகை காலத்தில் விற்றுத்தள்ளியுள்ளது. பண்டிகை காலத்தில் நண்பர்களுக்கும், அன்பானவர்களுக்கும் பரிசாக அளிப்பதில் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு முக்கிய இடம் கிடைத்திருப்பதாகவும் கவுண்ட்டர் பாயின்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் இரண்டாம் நிலை நகரங்களில் தான் அதிக வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் வாட்ச் வாங்க ஆர்வம் காட்டியுள்ளதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.