இந்தியாவின் ஜிடிபி உயருமாம்…
சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் 2024 நிதியாண்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்று கணித்துள்ளது. அதாவது இதற்கு முன்பு இந்த அளவை 6.1%ஆக ஐஎம்எஃப் கணித்திருந்தது. இதனை தற்போது 6.3%ஆக இருக்கும் எனஅறு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜிடிபி 24 நிதியாண்டில் ஆறரை விழுக்காடாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்தது. இதற்கு நெருக்கமான அளவில் தற்போது ஐஎம்எப் கணித்துள்ளது. 25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.3%ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாதான் உலகிலேயே வேகமாக வளரும் நாடு என்ற பெருமையை பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி என்பது 2023,24 ஆகிய ஆண்டுகளில் 6.3%ஆக இருக்கும் என்று கூறியுள்ள நிபுணர்கள்.குறிப்பிடுகின்றனர். சர்வதேச அளவில் என்ன பிரச்னை நடந்தாலும் இந்தியா அதில் பெரிதாக பாதிக்கப்படாமல் தொடர்ந்து முன்னேறி செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது ஐஎம்எப் கடந்த ஏப்ரலில் கணித்ததைவிட அதிகமாக தற்போது கணித்துள்ளது. மேலும் உலக வங்கி கணிப்பின்படியும் இந்தியாவின் ஜிடிபி 6.3%ஆக 2024 நிதியாண்டில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலும் சமநிலையற்ற வளர்ச்சி இருந்து வருகிறது. உலக பொருளாதார வளர்ச்சி என்பது 3%ஆக உள்ளது. இது கடந்தாண்டு 3.5%ஆக இருந்தது.2024 நிதியாண்டில் 2.9%ஆக குறையுமாம். பிரேசில்,ரஷ்யா,மெக்சிகோ ஆகிய நாடுகளில் வளர்ச்சியும் உயர்ந்து வருகிறது. அமெரிக்காவின் வளர்ச்சி வெறும் 0.3%ஆக மட்டுமே உள்ளது. சீனாவின் வளர்ச்சி என்பது 5 % ஆக உள்ளது.சீனாவில் ரியல் எஸ்டேட் வீழ்ச்சியால் பொருளாதாரம் மிகப்பெரிய சிக்கலை சந்தித்து உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு இருந்த அளவுக்கு வளர்ச்சி இருக்குமா என்பது உறுதிபடத் தெரியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.