தயார்நிலை உணவுப்பொருட்கள் ஏற்றுமதி 24% அதிகரிப்பு..!!
இந்தியாவின் உண்ணத் தயார் நிலையில் உள்ள உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 24% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டு காலத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றுமதி:
பிஸ்கட், பேக்கரி உணவுப்பொருட்கள், காலையில் உண்ணும் உணவு தானிய வகைகள், இனிப்பு வகைகள், வேஃபர்ஸ், இந்திய இனிப்புகள், நொறுக்கு தீனிகள் உள்ளிட்வை உண்பதற்கு தயார் நிலையில் உள்ள உணவுப் பொருட்களின் பட்டியில் அடங்கும்.
உண்ண தயார் நிலையில் உள்ள உணவுப் பொருட்கள், பரிமாறுவதற்கு தயார் நிலையில் உள்ள பொருட்கள் ஆகிய நுகர்வோர் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி, கடந்த 10 ஆண்டு காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உண்பதற்கு தயாராக உள்ள உணவுப் பொருட்கள் பிரிவில், மதிப்பு கூடுதல் பொருட்களுடைய ஏற்றுமதியை நம்பியுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை, கடந்த பத்தாண்டுகளில் 12% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும், மேலும், இதே காலகட்டத்தில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுடைய ஏற்றுமதி ஆணையத்தின்கீழ் செயல்படும், உண்ணத் தயார் நிலையில் இருக்கும் பொருட்கள் ஏற்றுமதி 2.1 என்ற சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தகவல்:
2021-22-ம் நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையான காலத்தில் உண்பதற்கு தயாராகவுள்ள பொருட்களுடைய ஏற்றுமதி, கடந்த ஆண்டு இதேகாலத்துடன் ஒப்பிடும்போது, 24 சதவீதம் உயர்ந்து, $394 மில்லியனாக காணப்பட்டது.
உண்பதற்கு தயார் நிலையில் உள்ள உணவுப் பொருட்களின் ஏற்றுமதி, கடந்த 2020-21-ம் ஆண்டில், 89 சதவீதம் என்ற அதிக அளவில் இருந்ததாக வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.